Saturday, 22 July 2023
இளவயதில் தலை முடி நரைக்கிறதா...! இது மட்டும் இருந்தால் போதும் உடனடி பலன் | White Hair Black Hair Natural Remedy
இளவயதில் தலை முடி நரைக்கிறதா...! இது மட்டும் இருந்தால் போதும் உடனடி பலன்
ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தலை முடி பற்றிய கவலை அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனையாகும்.
அதுவும் சிறு வயதில் தலைமுடி வேலையாக மாறுதல் மற்றும் முடி கொட்டுதல் போன்றவை மிக முக்கியமானவை. இந்த பிரச்சனைகளுக்கு பல்வேறுபட்ட தீர்வுகள் இருக்கின்றன.
குறிப்பாக நரைமுடி பிரச்சினையை தவிர்க்க பல விஷயங்கள் இருந்தாலும், வெங்காய எண்ணெயை தடவி வந்தால் தீர்வு காணமுடியுமாம்.
வெங்காய எண்ணெய் மூலம், முடி பிரச்சனையில் இருந்து விடுபட்டு, தலைமுடியை எப்படி அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுவது என இந்த பதிவில் காணலாம்.
நன்மைகள்
White Hair Black Hair Natural Remedy
இரத்த ஓட்டம் சரியாக இருந்தால், முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், வெங்காய எண்ணெயை தடவுவது நன்மை பயக்கும்.
மேலும், வெங்காய எண்ணெயை தொடர்ந்து தடவி வந்தால், அது முடி மற்றும் உச்சந்தலைக்கு ஏராளமான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
இது முடியை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்கிறது. வெங்காய தொடர்ந்து தடவி வருவதால் முடி உதிர்வு முதல் பிளவு முனை வரை நிவாரணம் அளிக்கிறது.
இது தவிர, இது முடியின் இயற்கையான pH ஐ பராமரித்து, முடியை அடர்த்தியாக மாற்றும் வேலையை செய்கிறது.
இந்த எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் முடி உதிர்வதைத் தடுக்கும் என்சைம்களை செயல்படுத்துகிறது.
ஆகையால் இந்த எண்ணெயை பயன்படுத்தினால், அது கூந்தலுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கும்.
இதில் உள்ள கந்தகம் உச்சந்தலையை ஆரோக்கியமாக்குகிறது. இது கூந்தலை வலுவூட்டுகிறது.