கருமை நிறத்தை போக்க வேண்டுமா... கிரீம்களுக்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள் உடனடிபலன்
தற்போது உலகில் நடக்கின்ற சூரிய அலைத் தாக்கத்தால் உலகம் பூராகவும் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.
இதனால் இயற்கை சூழல் மட்டும் பாதிப்படைவதில்லை மாறாக மனிதர்களின் உடலிலும் பாரிய தாக்கம் ஏற்படுகிறது.
அதாவது சருமத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இதனால் சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே செல்கிறது.
எந்த அளவிற்கு சருமத்தின் நிறத்தை பராமரித்து வைத்திருக்கிறார்களோ அவற்றிற்கெல்லாம் பலன் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
Beauty White Face Simple Tips In Tamil
இப்பொழுதெல்லாம் பெண்களைப் போன்று ஆண்களும் சரும நிறத்தை பராமரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதற்காக பலர் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி போடுகிறார்கள். இருப்பினும் தற்காலிகம் தான்.
அந்தவகையில் முகத்தின் கருமை நீங்க சில இயற்கையான பயனுள்ள குறிப்புகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
இயற்கையான பயனுள்ள குறிப்புகள்
பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும்.
இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.
ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.
கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.
மாம்பழத்தின் தோல்
Beauty White Face Simple Tips In Tamil
இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம். மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.
தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.
எலுமிச்சை சாறு
சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.
தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையா
0 comments:
Post a Comment