கை மற்றும் கால் முட்டிகளில் கருமையா; அப்போ இதை செய்து பாருங்க.
Olive Skin Care Water
பெரும்பாலனவர்களுக்கு கைகள் மற்றும் கால் முட்டிகளில் கருமை ஏற்படும். அதை எவ்வாறு நீக்க வேண்டும் என்று தெரிந்துக் கொண்டு பல கிறீம்களை உபயோகித்து இருப்போம்.
ஆகவே வீட்டிலேயே கருமை நீங்க என்ன செய்யலாம் மற்றும் கருமை ஏற்பட என்ன காரணம் என்று பார்க்கலாம்.
கருமை ஏற்படுவதற்கான காரணங்கள்
சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்காததால் அந்தப்பகுதி கருமையாகும்.
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உடலின் சில பாகங்களின் நிறம் மாறும்.
How To Remove Skin Black Mark In Tamil
எவ்வாறு இந்த கருமையை நீக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 4 தே.கரண்டி
எள்ளு பவுடர் – சிறிதளவு
ஆலிவ் ஆயில் – 1-2 தே.கரண்டி
இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த பேஸ்ட்டை கை மற்றும் கால் முட்டிகளில் காணப்படும் கருமை படிந்திருக்கும் இடங்களில் பூச வேண்டும்.
பின் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்தால் கருமை நீங்கும்.
மேலும் முகத்திலும் ஸ்க்ரப் போன்று பூசினால் இறந்த செல்கள் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment