Sunday 25 June 2023

உலகின் மிக பழமையான உணவுகள் எவை தெரியுமா..! | Oldest Foods In The World


உலகின் மிக பழமையான உணவுகள் எவை தெரியுமா..!

மனிதன் உயிர் வாழ்வதற்கான முக்கிய காரணமே உணவுதான். அதனால்தான் எமது ஆன்றோர் உணவே மருந்து மருந்தே உணவு என்றனர்.

மனித நாகரிகம் வளர வளர உணவு முறையும் மாறியுள்ளது. ஆரம்பத்தில், பழங்கள், காய்கறிகள், இறைச்சியை பச்சையாக மனிதன் சாப்பிட்டு வந்தான். பின்னர் உணவு பதப்படுத்துதல், நெருப்பு வந்த பின்னர் அதை சமைத்தல் , அவித்தல் போன்றவற்றைக் கற்றுக்கொண்டான். அதன் பின்னர் தான் வகை வகையாக சமைக்கும் வழக்கம் வந்தது.

ஆனால், இந்த உணவுகள் எல்லாம் எப்போது இருந்து வழக்கத்தில் உள்ளது என்றோ அல்லது முதல் முறையாக சுவைக்கப்பட்ட உணவு என்னவாக இருக்கும் என்றோ நாம் சிந்தித்து இருக்க மாட்டோம். இப்போது அவற்றை தெரிந்துக்கொள்வோம்.

ரொட்டி

Oldest Foods In The World

சமையல் பொதுவானதாக மாறியபோது, ​​​​மனிதர்களுக்கு எழுதும் வழக்கம் இல்லாததால் ஆரம்பகால மனித சமையல் குறிப்புகள் பதிவு செய்யப்படவில்லை.

பதிவு செய்யப்பட்ட உணவுகளில் பழமையானதாக சொல்லபடுவது ரொட்டி.

14,000 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் வாழ்ந்த நடுபியன் வேட்டைக்காரர்கள் கிளப்-ரஷ் கிழங்குகள் வைத்து ரொட்டி செய்து சுட்டு சாப்பிட்ட ஆதாரங்கள் காணப்படுகின்றன.

தமால்

Oldest Foods In The World

பாஸ்ட் ஃபுட் அல்லது துரித உணவுகள் என்பது இன்றைக்கு நேற்று வந்தது இல்லை 10000 ஆண்டுகளுக்கு முன்பே இது இருந்ததாக சொல்லப்படுகின்றது.

உலகின் பழமையான துரித உணவு தமால் ஆகும்.

தமால் என்பது மெசோ அமெரிக்காவில் போர் படையினருக்கு கொடுக்கப்படும் உணவாகும்.

சோள உமி அல்லது வாழை இலைகள் நடுவே இறைச்சிகள், பீன்ஸ், பழங்கள், வைத்து சுற்றி கொடுக்கபடுவது ஆகும்.

தேன்

Oldest Foods In The World

இயற்கையாகவே சில உணவுகளுக்கு பதமாக இருக்கும் பண்புகள் உண்டு அதை தனியாக பதப்படுத்த தேவை இருக்காது. அப்படியான ஒன்று தான் தேன்.

மருத்துவ குணம் நிறைந்த இந்த உணவு பொருளை 3000 ஆண்டுகள் முன்பு இருந்து உணவாக சாப்பிட்டுள்ளனர்.

உலகின் பழமையான தேன் பண்டைய எகிப்தில் உள்ள ஒரு கல்லறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தேனில் காணப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளால் அது கெடாமல் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

மெசபடோமியன் ஸ்டியூ

Oldest Foods In The World

இன்றைக்கு பெரிய உணவகங்களில் சாப்பிடும் முன்னர் சூப் பரிமாறும் பழக்கம் உள்ளது.

பழமையான எழுதப்பட்ட ஸ்டியூ ரெசிபி மெசபடோமியன் ஸ்டியூ.

கிமு 3750 இல் சுமேரிய கியூனிஃபார்ம் கல் சுவடுகளில் குறிபிடப்பட்டுள்ள இது சில நறுமணப் பொருட்கள், இறைச்சி, கொழுப்பு மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

பூண்டு, கடுகு விதைகள்

மசாலா இல்லாமல் இப்போது உணவு என்பது கிடையாது.

பழமையான மசாலா எதுவாக இருக்கும் என்று பார்த்தால் பூண்டு, கடுகு விதைகள் தான் எழுதப்பட்ட மசாலா பொருட்களில் பழமையானது.

சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்னர் டென்மார்க் மற்றும் ஜெர்மனியில் வேட்டையாடுபவர்கள் விவசாயத்தின் வளர்ச்சிக்கு முன்பே தங்கள் உணவை சுவை படுத்த இந்த பூண்டு கடுகு விதைககளை பயன்படுத்தியுள்ளனர்.

அதற்கு பின்னர் தான் மிளகு பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment